அதிபரின் வாழ்த்து செய்தி
பது/கோணக்கலை தமிழ் மகா வித்தியாலயம்

மலையக மாணவர்களை தலைநிமிரச் செய்யும் அடையாளமாகத் திகழும் பது/கோணக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தினது இணையத்தளமானது புதுப்பொலிவுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எதிர்கால சமூகத்திற்கான தலைவர்களையும், முன்னோடிகளையும் உருவாக்கிடுவதில் பெரும்பங்காற்றும் எமது பாடசாலையின் திறன்மிகு மாணவர்களின், கல்வி மற்றும் விளையாட்டு உள்ளிட்ட கல்வி சாராத சாதனைகளினையும், அவர்கள் பற்றிய விபரங்களையும் உத்தியோகபுர்வமாக அனைவரும் பெற்றிடுவதற்கு எமது இந்த இணையத்தளம் வழிசெய்யும்.
பாடசாலை பற்றிய செய்திகளினை ஒளிவுமறைவுகளின்றி வெளிப்படுத்தவும் கல்லூரிக்கான வளர்ச்சித்திட்டங்கள் பற்றிய செய்திகள் மற்றும் அவற்றினை முன்கொண்டு செல்வதற்கு ஏற்படக்கூடிய தேவைகள் மற்றும் அவற்றிற்கு பங்களிப்புச் செய்தோர் பற்றிய விபரங்களினையும் ஒருங்குசேர பெற்றுக் கொள்ள ஏதுவான வழிவகைகளினை இந்த இணையத்தளத்தின் வாயிலாக மேற்கொண்டுள்ளோம்
திரு. S. ராஜேந்திரா
அதிபர்
பது/கோணக்கலை தமிழ் மகா வித்தியாலயம்