பிரதி அதிபரின் வாழ்த்து செய்தி
பது/கோணக்கலை தமிழ் மகா வித்தியாலயம்

பது/ கோணக்கலை தமிழ் மகா வித்தியாலய அன்னையின் மடியில் தவழும் குழந்தைகள் தரணியெங்கும் புகழ் பரப்பும் கல்விமான்களாக உயர்வு பெற்று அன்னைக்கு மகுடம் சூட்டி வரும் இத்தருணத்திலே பாடசாலையின் உத்தியோகபூர்வ இணையத்தளம் முகிழ்ந்து மணம் பரப்ப ஆரம்பித்துள்ளது. இந்தப் பொன்னான சந்தர்ப்பம் எமது கல்லூரியின் வரலாற்றில் சிறப்பு முத்திரை பதிக்கப்பட்டு போற்றப்படும் என்பது என் எண்ணமாகும்.
எமது கல்லூரியின் சாதனைகளையும், நினைவுகளையும் பதிவு செய்யவும் பாதுகாக்கவும் ஏற்ற ஊடகமாகவும் இத்தளம் எதிர்காலத்தில் அமையும்.
எமது கல்லூரின் தகவல்களையும், பண்பாட்டையும், சாதனைகளையும் ஆவணப்படுத்துவது எமது தமிழ் சமுதாயத்துக்கு நாம் செய்யும் முக்கியமான கடமையாகவும் அமையும்.
திரு T. முத்துக்குமார்
பிரதி அதிபர்
பது/கோணக்கலை தமிழ் மகா வித்தியாலயம்